< Back
மாநில செய்திகள்
சரக்கு வேன் மோதி தொழிலாளி சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

சரக்கு வேன் மோதி தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
12 Jan 2023 12:45 AM IST

சுவாமிமலை அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சுவாமிமலை அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தொழிலாளி

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள கடிச்சம்பாடி மேலத் தெருவை சேர்ந்த கைப்புள்ளை மகன் அண்ணாவு (வயது35). விவசாய கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை கும்பகோணம்- அரியலூர் நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது அரியலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி பார்சல் ஏற்றி சென்ற சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அண்ணாவு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாவு உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து பார்சல் வேனை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடி தலைமறைவாக உள்ள வேன் டிரைவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்