திருப்பூர்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் சாவு
|மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் சாவு
காங்கயம்
காங்கயம் அருகே சிறுகிணறு பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் பூபதி (வயது 25). இவர் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவரும், அவரது நண்பருமான கமல்ராஜ் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு காங்கயம் - கோவை சாலை சம்மந்தம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பூபதி ஓட்னார். கமல்ராஜ் பின்னால் அமர்ந்து இருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.இந்த விபத்தில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் பூபதி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். படுகாயங்களுடன் இருந்த கமல்ராஜிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------