< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
3 Nov 2022 2:16 AM IST

பட்டுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

பட்டுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

மோட்டார் சைக்கிள் மோதியது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மனைவி குஞ்சம்மாள் (வயது70). இவர் நேற்று பண்ணவயல் சாலையில் உள்ள கடைக்குச்சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் கீழே விழுந்த குஞ்சம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு ஆட்டோவில் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அங்கு சிகிச்சை பெற்று வந்த குஞ்சம்மாள் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

இது குறித்து அவருடைய மகன் மாயவன் பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்