< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிள்-வேன் மோதல்: என்ஜினீயர் சாவு
|7 Aug 2022 9:33 PM IST
மோட்டார் சைக்கிளும் வேனும் மோதி கொண்ட விபத்தில் என்ஜினீயர் இறந்தார்.
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் கணேஷ்(வயது23). என்ஜினீயர். இவர் தனது மோட்டார்சைக்கிளில் செம்போடை கடைத்தெருவிற்கு வந்து விட்டு புஷ்பவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து கணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.