< Back
மாநில செய்திகள்
அரசு பஸ்- ஸ்கூட்டர் மோதல்; மளிகை கடைக்காரர் சாவு

கோபி 

மயிலாடுதுறை
மாநில செய்திகள்

அரசு பஸ்- ஸ்கூட்டர் மோதல்; மளிகை கடைக்காரர் சாவு

தினத்தந்தி
|
11 July 2022 10:04 PM IST

பொறையாறு அருகே அரசு பஸ்சும், ஸ்கூட்டரும் மோதிக்கொண்ட விபத்தில் மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.

பொறையாறு அருகே அரசு பஸ்சும், ஸ்கூட்டரும் மோதிக்கொண்ட விபத்தில் மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.

மளிகை கடைக்காரர்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள தில்லையாடி கண்ணடியர் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது35). தில்லையாடியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் இன்று காலை பொறையாறுக்கு பொருட்கள் வாங்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். காட்டுச்சேரி சமத்துவபுரம் அருகே சென்றபோது பொறையாறில் இருந்து மயிலாடுதுறைக்கு தில்லையாடி வழியாக சென்று கொண்டிருந்த அரசு நகர பஸ்சும், ஸ்கூட்டரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கோபி, ஸ்கூட்டருடன் அரசு பஸ்சின் முன் பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் கோபியின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் மளிகை கடைக்காரர் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்