< Back
மாநில செய்திகள்
வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
திருப்பூர்
மாநில செய்திகள்

வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி

தினத்தந்தி
|
6 Sept 2023 5:48 PM IST

வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் பலியானார்.

திருப்பூர்

திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் சக்கரம் ஏறியது. இதில் அவர் பலியானார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேன் மீது மோதல்

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த குப்பையங்காடு பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவருடைய மகன் சபரீஷ் (வயது 17). இவர் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி நேற்று விடுமுறை என்பதால் இவர் வெளியே சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

திருப்பூர் புதிய பஸ்நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது இவரது மோட்டார்சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த சபரீஷ் மீது பின்னால் வந்த அரசு பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியது.

மாணவர் பலி

இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் கல்லூரி மாணவர் மீது அரசு பஸ் ஏறி, இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதயில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

==========

Related Tags :
மேலும் செய்திகள்