< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பர்கூர் அருகே லாரி மீது அரசு பஸ் மோதி 3 பேர் காயம்
|22 Jun 2023 12:30 AM IST
பர்கூர்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஓசூருக்கு அரசு விரைவு சொகுசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவியை சேர்ந்த ராகவன் (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார். பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கூட்ரோடு பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் டிரைவர் ராகவன், சேலத்தை பூவரசன் (24), சென்னையை சேர்ந்த வசந்தகுமார் (35) ஆகியோர் காயம் அடைந்தனர். இதில் டிரைவர் ராகவன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.