< Back
மாநில செய்திகள்
ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் விபத்தில் பலி
சிவகங்கை
மாநில செய்திகள்

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் விபத்தில் பலி

தினத்தந்தி
|
26 April 2023 12:15 AM IST

ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் விபத்தில் பலியானார்

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள கல்லல் பாரதிநகரை சேர்ந்தவர் மில்லர் (வயது 55). இவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இவர் அதிகாலை 4 மணியளவில் தனக்கு சொந்தமான ஆட்டோவினை ஓட்டிக்கொண்டு காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கல்லல் நோக்கி சென்றார். அப்போது செவரக்கோட்டை விலக்கு அருகே செல்லும்போது எதிரே காளையார்கோவிலில் இருந்து ஆடுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த மில்லர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்லல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்