< Back
மாநில செய்திகள்
ராயக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வியாபாரி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ராயக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வியாபாரி சாவு

தினத்தந்தி
|
25 April 2023 12:30 AM IST

ராயக்கோட்டை:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காடுசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 27). காய்கறி வியாபாரி. இவர் தர்மபுரி- ஓசூர் நெடுஞ்சாலையில் ராயக்கோட்டை அருகே சின்னகானாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பன்னீர்செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்