< Back
மாநில செய்திகள்
தொப்பூர் கணவாயில்லாரி, சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துடிரைவர்கள் படுகாயம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தொப்பூர் கணவாயில்லாரி, சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துடிரைவர்கள் படுகாயம்

தினத்தந்தி
|
26 March 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

தொப்பூர் கணவாயில் லாரி, சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

டிரைவர்கள் படுகாயம்

மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவைக்கு வெங்காய பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை கர்நாடக மாநிலம் சித்தரதுர்கா பகுதியை சேர்ந்த சக்தி (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிக்கெட்டு ஓடி முன்னால் சென்ற பிளாஸ்டிக் பார சரக்கு வேன் மீது மோதியது.

இதையடுத்து வெங்காய பார லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேனும், கார் ஒன்றின் பின் பகுதியில் மோதிவிட்டு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்காய பார லாரி டிரைவர் சக்தி மற்றும் சரக்கு வேன் டிரைவர் படுகாயம் அடைந்து தவித்தனர்.

ேபாக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் விபத்துக்குள்ளான வெங்காய பார லாரி, சரக்கு வேன் மற்றும் காரை மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்