< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
அஞ்செட்டி அருகே பஸ்- பள்ளி வாகனம் மோதல்;5 மாணவ, மாணவிகள் காயம்
|17 March 2023 12:30 AM IST
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கோட்டையூரில் உள்ள தனியார் பள்ளி வாகனம் ஒன்று நேற்று மாலை மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அஞ்செட்டி அருகே உரிகம் மலைப்பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் பஸ்சும், பள்ளி வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். பள்ளி வாகன டிரைவர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தை அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.