< Back
மாநில செய்திகள்
ஓசூரில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில்மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி

தினத்தந்தி
|
17 March 2023 12:30 AM IST

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 24). இவர் தனது மோட்டார்சைக்கிளில் கடந்த 14-ந் தேதி இரவு பத்தலப்பள்ளியில் இருந்து ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் குமார் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்