< Back
மாநில செய்திகள்
ராயக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள்- பால் வண்டி மோதல்; சிறுமி பலிபெற்றோர் படுகாயம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ராயக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள்- பால் வண்டி மோதல்; சிறுமி பலிபெற்றோர் படுகாயம்

தினத்தந்தி
|
8 March 2023 12:30 AM IST

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்- பால் வண்டி மோதிய விபத்தில் சிறுமி பலியானார். பெற்றோர் படுகாயம் அடைந்தனர்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள யு.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 30). விவசாயி. இவருடைய மனைவி முனியம்மாள் (26). இவர்களுக்கு 4 வயதில் கிருத்திகா என்ற மகள் உள்ளாள்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கொத்தப்பள்ளியில் இருந்து ராயக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ராயக்கோட்டையில் இருந்து பால் வாகனமானது கெலமங்கலம் நோக்கி வந்தது.

சிறுமி சாவு

அந்த சமயம் கூத்தனப்பள்ளி அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே மோட்டார் சைக்கிளும், பால் வாகனமும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கிருத்திகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நாகராஜூக்கு கால் முறிவும், முனியம்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்