< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள்-பஸ் மோதல்; தொழிலாளி பலி
|8 March 2023 2:00 AM IST
திண்டுக்கல் அருகே அரசு பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பலியானார்.
திண்டுக்கல் அருகே சிறுமலையில் உள்ள அகஸ்தியர்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துப்பாண்டி (வயது 21). கூலித்தொழிலாளி. நேற்று இவர், திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ரெண்டலப்பாறை பிரிவு அருகே அவர் சென்றபோது, சிறுமலையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.