< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
நாமகிரிப்பேட்டையில் மொபட் மீது கார் மோதி தொழிலாளி படுகாயம்
|17 Dec 2022 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). இவர் ெமாபட்டில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது நாமகிரிப்பேட்டையில் இருந்து வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சசிகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.