< Back
மாநில செய்திகள்
மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி முதியவர் சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி முதியவர் சாவு

தினத்தந்தி
|
18 Sept 2022 12:15 AM IST

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி முதியவர் சாவு

மத்தூர்:

போச்சம்பள்ளி தாலுகா நொறுக்குபாறையை சேர்ந்தவர் திம்மராயன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் மொபட்டில் தர்மபுரி- போச்சம்பள்ளி சாலையில் போலீஸ் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திம்மராயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திம்மராயன் இறந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்