< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
லாரி மோதி தொழிலாளி பலி
|10 Aug 2022 4:43 AM IST
லாரி மோதி தொழிலாளி பலியானார்.
தலைவாசல்:
தலைவாசல் அருகே வீரகனூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 63) தொழிலாளி. இவர் நேற்று இரவு 8 மணிக்கு வீரகனூர் அம்பேத்கர் சிலை அருகில் சாலையில் நடந்து சென்றார். அப்போது பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வீரகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.