< Back
மாநில செய்திகள்
விபத்தில் தொழிலாளி பலி
நாமக்கல்
மாநில செய்திகள்

விபத்தில் தொழிலாளி பலி

தினத்தந்தி
|
1 July 2022 7:52 PM IST

விபத்தில் தொழிலாளி பலியானார்.

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள வலையபட்டி ஊராட்சி குரும்பப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 63), கூலித்தொழிலாளி. இன்று இவர் தனது மொபட்டில் வலையபட்டியில் உள்ள மருந்து கடைக்கு, மருந்து வாங்க சென்று கொண்டிருந்தார். நாமக்கல்-திருச்சி ரோட்டை கடக்க முயன்ற போது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த டாரஸ் லாரி ஒன்று கிருஷ்ணமூர்த்தியின் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணமூர்த்தியின் மனைவி தாமரைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்