நாமக்கல்
கொல்லிமலை அடிவாரத்தில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம்-சிறுவன் மீது வழக்கு
|கொல்லிமலை அடிவாரத்தில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் போலீஸ் ஏட்டு படுகாயம் அடைந்தார்.
சேந்தமங்கலம்:
கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளியில் சேந்தமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், ஏட்டுகள் ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்த முயன்றபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் ஏட்டு ஆறுமுகம் மீது மோதியது. ஆனால் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏட்டு ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்ததில், ஆறுமுகம் மீது மோதிய மோட்டார் சைக்கிளை நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி கூச்சிக்கல் புதூரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.