< Back
மாநில செய்திகள்
ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு
நாமக்கல்
மாநில செய்திகள்

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு

தினத்தந்தி
|
5 Jun 2022 10:36 PM IST

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியானார்.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பட்டணத்திலிருந்து சென்று கொண்டிருந்தார். ராசிபுரத்தில் சேலம் ரோட்டில் தனியார் ஆண்கள் பள்ளி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் விவசாயி குப்புசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குப்புசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்