< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ஓசூரில்லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
|11 Sept 2023 12:30 AM IST
ஓசூர்:
ஓசூரில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி கொண்ட விபத்தில் தொழிலாளி இறந்தார்.
தொழிலாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள மல்லைநாயனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 41). தொழிலாளி. இவர் தற்போது ஓசூர் நரசிம்மா காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கட்ராமன் மோட்டார் சைக்கிளில் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றார்.
விசாரணை
அப்போது அங்குள்ள தனியார் வங்கி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.