< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
ராயக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
|8 Aug 2023 12:30 AM IST
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொப்பகரை ஊராட்சி சிங்காரபேட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 70). விவசாயி. இவர் ராயக்கோட்டை-சூளகிரி சாலையில் சிங்காரப்பேட்டை பக்கமாக கடந்த 5-ந் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதில் முனுசாமி படுகாயம் அடைந்து இறந்தார். இது குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.