< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
|6 July 2023 12:30 AM IST
தர்மபுரி அருகே உள்ள குண்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 36). கட்டிட தொழிலாளி. இவர் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் ராமாக்காள் ஏரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது சாலையின் மைய தடுப்பு பகுதியில் மோதி படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.