கரூர்
கரூரில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
|கரூரில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பங்கேற்றார்.
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.இதில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
குளித்தலை
குளித்தலையில் உள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் தலைமை தாங்கினார். குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா பல்லவிராஜா முன்னிலை வகித்தார். இதில் போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி வாசிக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர் உள்பட அனைவரும் உறுதி மொழி ஏற்று கொண்டனர்.முன்னதாக குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீதர், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் அருகே உள்ள புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் சிவசாமி தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவர்கள், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீசார் கலந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது போதைப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விளக்கி கூறப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.