< Back
மாநில செய்திகள்
குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு
அரியலூர்
மாநில செய்திகள்

குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

தினத்தந்தி
|
17 Oct 2023 11:00 PM IST

குழந்தை திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் "குழந்தை திருமணங்களே இல்லா இந்தியா" என்ற தலைப்பின்கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் குழந்தை திருமணம் குறித்து அனைத்து மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் குழந்தை திருமணத்திற்கு எதிராக அனைத்து மாணவிகளும் உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, பள்ளி துறை துணை ஆய்வாளர் செல்வகுமார் உள்பட பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

மேலும் செய்திகள்