< Back
மாநில செய்திகள்
தூய்மை நகரத்திற்கான உறுதி மொழி ஏற்பு
கரூர்
மாநில செய்திகள்

தூய்மை நகரத்திற்கான உறுதி மொழி ஏற்பு

தினத்தந்தி
|
13 July 2022 6:56 PM GMT

தூய்மை நகரத்திற்கான உறுதி மொழி ஏற்பு நடந்தது.

புகழூர் நகராட்சி சார்பில் காகித ஆலை மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தூய்மை நகரத்திற்கான உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பிரதாபன், நகராட்சி ஆணையாளர் கனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தூய்மையான நகரம், நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு மற்றும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தூய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுப்பது தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் விளக்கம் அளித்து, என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதி மொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்று, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தலைமையாசிரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்