செங்கல்பட்டு
காரணைப்புதுச்சேரி கிராமத்தில் காதல் தோல்வியால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை
|காரணைப்புதுச்சேரி கிராமத்தில் காதல் தோல்வியால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 24), ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக மோகன்ராஜை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
காதல் தோல்வி
இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்த மோகன்ராஜ் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்ட ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண்ணும் இவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இருவருடைய காதலும் முடிவுக்கு வந்த நிலையில் காதல் தோல்வி காரணமாக மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.