< Back
தமிழக செய்திகள்
காதல் தோல்வியால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை
திருநெல்வேலி
தமிழக செய்திகள்

காதல் தோல்வியால் ஏ.சி. மெக்கானிக் தற்கொலை

தினத்தந்தி
|
10 March 2023 12:54 AM IST

நெல்லையில் காதல் தோல்வியால் ஏ.சி.மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லையில் காதல் தோல்வியால் ஏ.சி.மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஏ.சி.மெக்கானிக்

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் கண்ணன். ஓய்வு பெற்ற தபால் ஊழியர். இவரது மகன் மாரிராஜ் (வயது 31). ஏ.சி. மெக்கானிக்கான இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலையில் மாரிராஜ் வீட்டில் இருந்தபோது, தற்கொலை செய்வதற்காக திடீரென விஷம் குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை பெற்றோர் பார்த்து உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாரிராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காதல் தோல்வி

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், மாரிராஜ் கடந்த சில ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, காதல் தோல்வியால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

எனினும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்