விழுப்புரம்
நீர்த்தேக்க தொட்டியை இடித்து இரும்புக்கம்பிகள் அபேஸ்
|விழுப்புரம் அருகே நீர்த்தேக்க தொட்டியை இடித்து இரும்புக்கம்பிகள் அபேஸ் கலெக்டரிடம் புகார்
விழுப்புரம்
விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரை சேர்ந்த பொதுமக்கள், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊராட்சியில் இருந்த பழைய நீர்த்தேக்க தொட்டி கடந்த 29.9.2022 அன்று தனிப்பட்ட நபரால் இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி சில தகவலை கேட்டு விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த தண்ணீர் தொட்டியை இடித்து அதில் உள்ள 7 டன் இரும்புக்கம்பிகளை அந்த நபர் எடுத்துச்சென்றுள்ளார். அதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். எனவே இதுகுறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.