< Back
மாநில செய்திகள்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

தினத்தந்தி
|
26 Feb 2023 12:50 AM IST

நெல்லையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் போலீஸ்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த குமார் (வயது 52) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் கோர்ட்டு அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் விஜயநாராயணம் போலீசார் குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற பிடியாணையை நிறைவேற்றினர்.

மேலும் செய்திகள்