< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
|21 July 2023 2:39 AM IST
நெல்லை அருகே நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே உள்ள தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் இசக்கிதுரை என்ற கட்டத்துரை (வயது 23). இவரை கொலை முயற்சி வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு தாழையூத்து போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இந்த நிலையில் தாழையூத்து போலீசார், இசக்கிதுரையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.