< Back
மாநில செய்திகள்
தலைமறைவாக இருந்த கொத்தனார் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தலைமறைவாக இருந்த கொத்தனார் கைது

தினத்தந்தி
|
2 May 2023 1:25 AM IST

அடிதடி வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கொத்தனார் கைது

அழகியபாண்டியபுரம்,

பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது41), கொத்தனார். இவர் மீது பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆரோக்கியராஜ் வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து ஆரோக்கியராஜிக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. பூதப்பாண்டி போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் அழகியபாண்டியபுரம் சந்திப்பில் ஆரோக்கியராஜ் நிற்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்