< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
தலைமறைவாக இருந்தவர் கைது
|26 Nov 2022 2:32 AM IST
தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் ஒன்று நடந்தது. இதில் களக்காடு சாலைப்புதூர் அண்ணா நகரை சேர்ந்த நம்பிராஜன் (வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் நம்பிராஜனுக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. இதற்கிடையே நம்பிராஜனை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி நாங்குநேரி போலீசார், நம்பிராஜனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.