< Back
மாநில செய்திகள்
தலைமறைவாக இருந்தவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தலைமறைவாக இருந்தவர் கைது

தினத்தந்தி
|
6 Oct 2023 2:47 AM IST

தலைமறைவாக இருந்தவர் கைது

ஈத்தாமொழி:

ஈத்தாமொழியை அடுத்த செம்பொன்கரை பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 42), கொத்தனார்.

கடந்த 2012-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் ஈத்தாமொழி போலீசார் நடராஜனை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் 10 ஆண்டாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

ேமலும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்தநிலையில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசாருக்கு வடக்கன்குளத்தில் நாகராஜன் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்