< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொழிலாளர் தினம்: ஞாயிறு கால அட்டவணையில் இயங்கும் மின்சார ரெயில்கள்
|1 May 2024 4:53 AM IST
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணையில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) தேசிய விடுமுறை என்பதால் மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும் எனவும், முன்பதிவு மையங்கள் பகுதி நேரம் மட்டும் இயங்கும் எனவும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்டிரல்- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணையின்படி இயக்கப்படும்.
இதேபோல, பயணிகள் முன்பதிவு மையங்கள் ஞாயிறு கால அட்டவணைபடி (காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை) பகுதி நேரம் மட்டுமே செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.