கன்னியாகுமரி
சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
|வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்:
வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
குமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் ஆரல்வாய்மொழி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 இடங்களில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் என்பவர் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேலும் இதுதொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டது.
பணியிடை நீக்கம்
இதில் சம்பந்தப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பணியிடை நீக்கம் செய்தார்.
வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கியதாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் குமரியில் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.