மதுரை
திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில்தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம்
|திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையின் உச்சியில் தண்டாயுதபாணி சுவாமிக்கு தனி கோவில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் கார்த்திகை அன்று சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. நேற்று ஆவணி மாத கார்த்திகையொட்டி மலை அடிவாரத்தில் உள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க மயில் வாகனத்தில் தண்டாயுதபாணி சுவாமி புறப்பட்டு படிக்கட்டுகள் வழியே மலை உச்சிக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதனைத்தொடர்ந்து மலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமிக்கு சர்வ அலங்காரமும், மகாதீப ஆராதனை நடைபெற்றது. .இந்த நிலையில் மலை பிரகாரத்தில் சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.