< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்
விழுப்புரம்
மாநில செய்திகள்

பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்

தினத்தந்தி
|
30 Sept 2022 12:15 AM IST

ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள சோழகனூரை சேர்ந்தவர் ரூபினாமேரி(வயது 40). இவர் நேற்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த 5 பவுன் நகையை மீட்டார். பின்னர் அதை பையில் வைத்துக்கொண்டு விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார். மகாராஜபுரம் சென்றதும் ஷேர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கியதும் தான் வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் இருந்த நகையை காணாமல் அதிர்ச்சி அடைந்த ரூபினாமேரி அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தும் நகை கிடைக்கவில்லை. ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தபோது யாரோ மர்ம நபர், அந்த பெண்ணிடம் இருந்து நகையை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர், விழுப்புரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு நகையை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்