< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு மாணவி பரீட்சை முடிந்தவுடன் கடத்தல் - போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
|3 Jun 2022 2:26 PM IST
சென்னையில் 10-ம் வகுப்பு மாணவி பரீட்சை முடிந்தவுடன் பள்ளியில் இருந்தே கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச்சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 27). மெக்கானிக் தொழில் செய்யும் இவர், சேத்துப்பட்டு பகுதியைச்சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்தார். கடந்த 30-ந் தேதி பரீட்சை முடிந்தவுடன், மாணவியை பள்ளியில் இருந்தே, திலீப்குமார் கடத்தி சென்று விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் கொடுத்த புகார் அடிப்படையில் சேத்துப்பட்டு போலீசார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். திலீப்குமார் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மாணவியை மீட்ட போலீசார், பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.