< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் 4 பவுன் நகை அபேஸ்
|9 Oct 2023 12:15 AM IST
மூதாட்டியிடம் 4 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி ராணி (வயது 65). இவர் கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு பஸ்சில் பண்ருட்டிக்கு வந்தார். அப்போது பஸ்சில் இருந்த கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள், ராணி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை அபேஸ் செய்துவிட்டு சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் இருந்து நகையை அபேஸ் செய்துவிட்டு சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.