< Back
மாநில செய்திகள்
பாலிஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ்
விழுப்புரம்
மாநில செய்திகள்

பாலிஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகை அபேஸ்

தினத்தந்தி
|
10 Sept 2022 10:54 PM IST

திருவெண்ணெய்நல்லூர் அருகே பாலிஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 3 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் அருகே உள்ள சி.மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 68). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பூங்காவனத்திடம் நாங்கள் நகை பாலிஷ் போடும் தொழில் செய்து வருகிறாம். உங்களிடம் பழைய நகை இருந்தால் தாருங்கள். அதனை நாங்கள் பாலிஷ் போட்டு புதியது போன்று மாற்றி தருகிறோம் என கூறினர். அதனை நம்பிய பூங்காவனம் தன்னிடம் இருந்த 3 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மர்மநபர்கள் 2 பேரும் மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டனர். அப்போது அவர் வீட்டிற்குள் சென்று தண்ணீர் கொண்டு வருவதற்குள் அந்த மர்ம நபா்கள் 2 பேரும் நகையுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.



மேலும் செய்திகள்