< Back
மாநில செய்திகள்
ஆவின் டிலைட்  3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம்
மாநில செய்திகள்

ஆவின் 'டிலைட்' 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகம்

தினத்தந்தி
|
2 Nov 2022 12:59 PM IST

ஆவின் 'டிலைட்' என்ற 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை,

ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மழைக்காலம் என்றால் தண்ணீர் தேங்குவதும், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையில், இது போன்ற காலங்களில் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் மக்களுக்குப் பால் பவுடர் போன்றவை வழங்கப்படும். ஆனால் இனி டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டிலைட் பால் குளிர்சாதன வசதி ஏதும் இல்லாமல் 90 நாட்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆவின் டிலைட் பால் 500 மி.லி பாக்கெட் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்