< Back
மாநில செய்திகள்
பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு - ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவு
சென்னை
மாநில செய்திகள்

பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு - ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவு

தினத்தந்தி
|
15 Sept 2022 1:53 PM IST

ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட போரூர் காவல் நிலைய எல்லையில் உள்ள ஐயப்பன் தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இரவு நேரத்தில் காரில் சென்ற பெண்ணை மடக்கி கும்பல் ஒன்று கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் தொடர்புடைய அய்யப்பன் தாங்கல் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் (வயது 22), கருப்பையா (27), தினேஷ் (28) மற்றும் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய எபினேசர் (29), சுனில் (24), சூர்யா (23), ஆனந்த் (22) முபாரக் (23), வெங்கடேஷ் (26) ஆகிய 9 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார் 9 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்