கள்ளக்குறிச்சி
தென்பெண்ணையாற்றை வணங்கி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு
|திருவெண்ணெய்நல்லூர் அருகே தென்பெண்ணையாற்றை வணங்கி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு
திருவெண்ணெய்நல்லூர்
விஷ்வ ஹிந்து பரிஷத் தர்மபிரசார் பிரிவு சார்பில் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றை வணங்கி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வற்றாமல் ஆற்றில் வருடம் முழுவதும் தண்ணீர் ஓட வேண்டும், அதன் மூலம் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதை வேண்டி இந்த சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில் மணலால் சிவலிங்கத்தை உருவாக்கி சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆற்றுக்கு சிவாச்சாரியர்கள் மகா தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் துணைத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் மாநில அமைப்பாளர் அழகிரி முன்னிலையில் ராமேசுவரம் ராமசேது மகா சமுத்திர மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி குழுவை சேர்ந்த நாகராஜன், வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் பஞ்சநாதன், பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு மாநில துணைத்தலைவர் வேலு, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தர்மஜாக்ரன் பொறுப்பாளர் கணபதி மற்றும் இந்து அமைப்பினர், பொதுமக்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.