< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமமுக செயற்குழு கூட்டம் நவம்பர் 4ம் தேதி நடைபெறும் - டிடிவி தினகரன் அறிவிப்பு
|24 Oct 2023 1:00 PM IST
அமமுக செயற்குழு கூட்டம் நவம்பர் 4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் C.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 04.11.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி, ஃபெமினா ஹோட்டலில் உள்ள காவேரி ஹாலில் நடைபெற உள்ளது.
கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.