< Back
மாநில செய்திகள்
காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூரம் முளைக்கட்டு வைபவம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

காந்திமதி அம்பாளுக்கு ஆடிப்பூரம் முளைக்கட்டு வைபவம்

தினத்தந்தி
|
31 July 2022 8:08 PM GMT

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டுதல் வைபவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டுதல் வைபவம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூர திருவிழா

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான வளைகாப்பு உற்சவம் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 9-ம் திருநாள் அன்று செப்பு தேரோட்டம் நடைபெற்றது.

முளை கட்டுதல் வைபவம்

நேற்று காலை தீர்த்தவரி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு பச்சை புடவை கட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் முளைக்கட்டிய பயறுகளை அம்பாளுக்கு மடிநிறைத்து முளைக்கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்