< Back
மாநில செய்திகள்
பாவூர்சத்திரம் கோவில்களில் ஆடிப்பூர விழா
தென்காசி
மாநில செய்திகள்

பாவூர்சத்திரம் கோவில்களில் ஆடிப்பூர விழா

தினத்தந்தி
|
23 July 2023 12:30 AM IST

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் ஆகியவை அம்மனுக்கு படைத்து, சிறப்பு தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலிலும் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சாயரட்சை, அம்பாளுக்கு வளைகாப்பு ஆகியன நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்