< Back
மாநில செய்திகள்
ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 24-ந் தேதி கொடியேற்றம்
மாநில செய்திகள்

ஆடிப்பூர திருவிழா: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 24-ந் தேதி கொடியேற்றம்

தினத்தந்தி
|
17 July 2022 7:24 AM GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதையொட்டி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

28-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி, 30-ந் தேதி ஆண்டாள் சயன சேவை, வருகிற 1-ந் தேதி ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி தற்போது தேர் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஆடிப்பூர திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்