< Back
மாநில செய்திகள்
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா

தினத்தந்தி
|
14 July 2023 3:14 PM IST

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் 1,500 ஆணடுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மலை கோவிலில் வேதகிரீஸ்வரர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். தாழக்கோவிலில் திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவும், சித்திரை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை பிரம்மோற்சவ விழாவும் மிகவும் சிறப்புடையதாகும். இந்த நிலையில் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவிலில் ஆடிமாதத்தையொட்டி நடைபெறும் ஆடிப்பூர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் செய்திகள்