< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் ஆடிப்பூர திருவிழா
|23 July 2023 12:45 AM IST
அம்மன் கோவில்களில் ஆடிப்பூர திருவிழா நடந்தது.
நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள பழமை வாய்ந்த அனிச்சியகுடி முச்சந்தி காளியம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 11-ந் தேதி சக்தி கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் ெதாடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் இரவு அம்மன் பீங்கான் ரதத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. திட்டச்சேரி வெள்ளத்திடலில் உள்ள மகாகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.